விண்வெளியில் ஓர் அற்புதம்!

ஜனவரி 31ம் தேதி 

தாமிர நிலாவைக் காணத்தவறாதீர்கள்

2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் தேதியன்று சந்திரன் உதிக்கும் சமயம் முழு சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது!!

முழு சந்திர கிரகணம் போது சந்திரன் மறைவதில்லை. ஆனால், ஒரு பிரகாசமான தாமிர நிறத்தைப் பெறுகிறது.

இந்த கிரகணத்தைப் பார்ப்பது கண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பானதே. இதைப் பார்ப்பதற்கு எந்த உபகரணமும் தேவையில்லை.

முன்பாகவே திட்டமிட்டு, சந்திர உதயம்  தெளிவாகத் தெரியும் ஒரு தகுந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

இந்நிகழ்ச்சியை ஒரு தாமிர நிலாவை காணவிருக்கும் பிக்னிக்காக கருதி, அந்த இடத்திற்குச் செல்லவும்.

1மணி நேரம் நீடிக்கும் இந்த முழு சந்திர கிரகணம் இந்திய நேரப்படி சரியாக ஜனவரி 31ம் தேதி 18.22க்கு (மாலை 6.22க்கு) தொடங்குகிறது. அதற்குப் பின்னர், பகுதிக் கிரகணத்தின் கட்டம் மேலும் இரண்டு மணி நேரம் நீடிக்கும.

ஒளி  பௌதிகவியல், கிரகணங்கள், நமது சூரிய மண்டலம் இவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், விஞ்ஞான முறையில் சிந்திக்கும் திறனை மேம்படுத்தவும் இந்த நிகழ்ச்சியை ஓர் அரிய வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இப்படி ஒரு கிரகணம் பார்க்கும் நிகழ்ச்சியை எவர் வேண்டுமானலும் ஏற்பாடு செய்யலாம்.

இத்தகைய அரிய நிகழ்வைப் பற்றி பலரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட வலைதளங்களை அணுகவும்.

https://coppermoon18.wordpress.com

and

https://www.iiap.res.in//people/personnel/pshastri/grahana/grahana.html

Advertisements